தமிழகத்தில் 3 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று..

பள்ளி மாணவிகள்

தமிழகத்தில் அரியலூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாமல் இருந்தது. முதல் அலையின் தாக்கம் குறைந்தபோது ஒரு சில நாட்கள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

  ஆங்காங்கே தொற்று பரவல் அபாயத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நடப்பு கல்வி ஆண்டும் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இல்லாத நிலை இருந்தது. இதனால், ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொடர்ந்து வகுப்புகள் நடந்து வந்தது.

  இதனிடையே, தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததால், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கடந்த 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.  தொடர்ந்து, தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளி நிர்வாகம் செயல்பட வேண்டும் என அரசு அறிவித்தது.

  Also read: 12 முதல் 18 வயது குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட வாய்ப்பு அதிகம்.. மருத்துவர்கள் தகவல்

  இதைத்தொடர்து, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சூழலில் அரியலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதையடுத்து, அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், வரதராஜன் பேட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

  இதையடுத்து மாணவிகள் இருந்த வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. வகுப்பறையில் இருந்த மற்ற மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா கண்டறியப்பட்ட பள்ளிகளில், மாவட்ட ஆட்சியர் அமுதா ஆய்வு மேற்கொண்டார். இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாணவிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடலூர் மாவட்டத்தில், மூன்று ஆசிரியர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று நாட்களை ஆகியுள்ள நிலையில், அடுத்தடுத்து மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: