புனேவிலிருந்து 3.65 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்தது

தடுப்பூசி

புனேவில் இருந்து விமானம் மூலம் 3.65 லட்சம் கோவீஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலைய வந்தது.

  • Share this:
    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் தடுப்பூசிகள் கட்டுப்பாடுகள் ஏற்பட்டது உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியது.

    இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 31 பார்சல்களில் 977 கிலோ எடையில் 3.65 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு செல்ல உள்ளது.
    Published by:Vijay R
    First published: