தஞ்சையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 3 பேர் மயக்கம்

தஞ்சையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 3 பேர் மயக்கம்

கொரோனா தடுப்பூசி

Coroana Vaccine | மயக்கமடைந்த 3 பேரிடமும் மருத்துவ கல்லூரி முதல்வர் நலம் விசாரித்தார்.

 • Share this:
  தஞ்சையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்கள பணியாளர்கள் 3 பேர் மயக்கமடைந்துள்ளனர்.

  கடந்த ஜனவரி 16-ம் தேதி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு முறையான வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி போடப்பட்டது.

  இதையடுத்து, 28 நாட்களுக்குப் பின் மீண்டும் இரண்டாவது தவணையாக 'டோஸ்' செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஏற்கனவே தடுப்பூசி போட்டுகொண்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

  தமிழகத்தில், இதுவரை கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து 2,11,484 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், கடந்த ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்ட 3, 126 சுகாதார பணியாளர்கள் மட்டும் இன்று இரண்டாவது 'டோஸ்' தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது.

  தஞ்சையில் 220 பேருக்கு இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தஞ்சை மருத்துவ கல்லூரியல் தடுப்பூசி போட்டுக் கொண்ட 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களுக்கு தஞ்சை மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  மயக்கமடைந்த 3 பேரிடமும் மருத்துவ கல்லூரி முதல்வர் நலம் விசாரித்தார். தஞ்சையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மயக்கமடைந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இன்று கொரோனா தடுப்பூசி போட வேண்டாமென்று கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் மருத்துவ கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு வலுகட்டாயமாக போடப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
  Published by:Vijay R
  First published: