ஆரணியில் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு...

Youtube Video

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் தரைமட்டமானதில் 15 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

 • Share this:
  திருவண்ணாமலை மாவட்டம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  ஆரணி, புதுகாமூர் பகுதியில் முக்தா பாய் என்பவரது வீட்டில், சிலிண்டரில் கசிவு ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது. இன்று காலை டீ போடுவதற்காக முக்தா, சிலிண்டரை ஆன் செய்தபோது, வெடித்துள்ளது. இதில் முக்தாவின் வீடும், அவரது வீட்டின் மற்றொரு பகுதியில் குடியிருந்த தனசேகரன் வீடும் தரைமட்டமானது. பயங்கர சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

  மேலும் படிக்க...சென்னையில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு: 79 வழக்குகள் பதிவு  விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், அப்பகுதி மக்களுடன் இணைந்து இடிபாடுகளில் சிக்கிய 7 பேரை மீட்டனர். இதில் மீனா என்ற 15 சிறுமியும், காமாட்சி, சந்திரா என்ற 2 பெண்களும் உயிரிழந்தனர். மேலும் ஹேமநாத் என்ற சிறுவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Published by:Vaijayanthi S
  First published: