சென்னையில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று

சென்னையில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று

கொரோனா வைரஸ்

சென்னையில் உருமாறிய இங்கிலாந்து வகை கொரோன தொற்று மேலும் 3 பேருக்கு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

 • Share this:
  சென்னையில் மேலும் 3 பேருக்கு உருமாறிய இங்கிலாந்து வகை கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

  இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதத்தில், இங்கிலாந்தில் இருந்து சென்னை திரும்பியவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், முதலில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

  மேலும் படிக்க... பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை- பொள்ளாச்சி ஜெயராமன்

  இந்நிலையில், பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பிய இருவர் மற்றும் தொடர்பில் இருந்த ஒருவருக்கு, புதிய வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டடதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. இதன்மூலம் தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது. இவ்வாறு புதிய வகை கொரோன தொற்று அதிகரித்துவருவது தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றது.

  இந்நிலையில், சென்னையில் உருமாறிய இங்கிலாந்து வகை கொரோன தொற்று மேலும் 3 பேருக்கு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. புதிய வகை கொரோன தொற்று குறித்து பொதுமக்கள் கவலைபட வேண்டாம் என்றும் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதராத்துறை தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: