ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் சூதாட்டத்தை இனி விளையாடினால் 3 மாதம் சிறை ; ரூ.5 ஆயிரம் அபராதம்: தமிழக அரசு அதிரடி 

ஆன்லைன் சூதாட்டத்தை இனி விளையாடினால் 3 மாதம் சிறை ; ரூ.5 ஆயிரம் அபராதம்: தமிழக அரசு அதிரடி 

மாதிரி படம்

மாதிரி படம்

ஆன்லைன் விளையாட்டுக்கான பண பரிமாற்றத்தில் வங்கியோ, நிதி நிறுவனமோ ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடினால் 3 மாதம் வரை சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணை, ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல், விளையாட்டை வழங்குவோரின் செயல்பாடுகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆணையம் பரிந்துரைகளை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  உள்ளூரில் ஆன்லைன் விளையாட்டு நடத்துவோருக்கு பதிவு சான்றிதழை ஆணையம் வழங்கும் எனவும், உரிய சான்றிதழ் பெறாமல் உள்ளூர் ஆன்லைன் விளையாட்டுகளை நடத்த முடியாது எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளின் பட்டியல் வெளியிடப்படும் எனவும், தேவைக்கேற்ப இந்த பட்டியல் மாற்றி அமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Also Read:ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

  ஆன்லைன் விளையாட்டுகளை நடத்த 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவுச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணம், பிற பொருட்களை வைத்து ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆன்லைன் விளையாட்டுக்கான பண பரிமாற்றத்தில் வங்கியோ, நிதி நிறுவனமோ ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  எந்தவொரு ஆன்லைன் விளையாட்டிற்கும் எதிரான புகார்களை பெற்று தீர்வு காண்பதற்கும்,எந்தவொரு நபரையும் நேரில் அழைத்து விசாரிக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனையில் நீதிமன்றம் தடைவிதிக்க முடியாது எனவும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மேல்முறையீட்டு ஆணையம் அமைக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் விளம்பரம் வெளியிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடினால் 3 மாதம் வரை சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், விளம்பரம் செய்தால் ஓராண்டு சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டை நடத்துவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Online rummy, Tamilnadu government