ஓசூர் அருகே பெற்றோரின் சண்டைக்கு குறுக்கே வந்த கர்ப்பிணி சுட்டுக்கொலை.... தலைமறைவான தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு....

வெங்கட லட்சுமி

ஓசூர் அருகே குடிபோதையில் கர்ப்பிணி மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த, தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

 • Share this:
  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கரடிக்கல் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். யுகாதி பண்டிகையையொட்டி அருணாச்சலத்தின் மகள் வெங்கட லட்சுமி, மருமகன் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் விருந்துக்காக வந்திருந்தனர். இந்நிலையில், மதுபோதையில் மனைவி மாதவியுடன், அருணாச்சலம் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர் மனைவியை துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார்.

  இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மகள் வெங்கடலட்சுமி தனது தாயை காப்பாற்ற குறுக்கே சென்றார். அப்போது அருணாச்சலம் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் வெங்கடலட்சுமி உடலில் குண்டுகள் பாய்ந்தன. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அங்கிருந்து அருணாச்சலம் தப்பி ஓடிவிட்டார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு, கிராம மக்கள், அருணாச்சலம் வீட்டின் முன்பு குவிந்தனர். அப்போது அங்கு குண்டுஅடிப்பட்டு வெங்கடலட்சுமி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய அருணாச்சலத்தை தேடி வருகின்றனர். பலியான வெங்கடலட்சுமிக்கு திருமணம் சமீபத்தில்தான் நடந்தது என்றும் அவர் 3 மாத கர்ப்பிணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க... தங்கப் புதையல் ஆசை காட்டி ரூ.22 லட்சம் பறித்த ஜோதிடர் கைது..  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: