ஒரே நாளில் ரவுடி கும்பலால் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியூர் அடுத்த புலிமேடு பகுதியைச் சேர்ந்த தணிகைவேல் என்பவர் சென்னை புழல் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் திவாகர், காமேஷ் ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேரையும் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் மூவரும் உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நிகழ்ந்தததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில் அரியூர் பகுதியில் மீண்டும் ஒரு ரவுடி கும்பல் தலைதூக்கியுள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.