முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னை : மழை நீரில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு

சென்னை : மழை நீரில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு

சென்னை பெய்த கனமழையில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 • 1-MIN READ
 • Last Updated :

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது.

  சென்னையில் காலை முதலே நகரின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளிலும் தெருக்களிலும் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் கனமழை காரணமாக மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். புளியந்தோப்பில் வடமாநில பெண் ஒருவரும், மயிலாப்பூரில் வீட்டுக்கு வெளியே வந்த சிறுவனும், ஒட்டேரியில் தமிழரசி என்கிற மூதாட்டி ஒருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

  இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்ப்ட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

  First published: