முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு: வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது.. அரசை சாடிய டிடிவி தினகரன்!!

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு: வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது.. அரசை சாடிய டிடிவி தினகரன்!!

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

கழிவு நீர் வெளியேற்றும் தொட்டியில் இறங்கிய தொழிலாளர்கள் 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

கழிவுகளைக் கையாள்வதில் மனிதர்களை ஈடுபடுத்தமாட்டோம் என்று வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது, என தமிழக அரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி 70வது வார்டு நேதாஜி ரோடு நேரு நகரில் உள்ள மாநகராட்சி கழிவு நீர் வெளியற்றும் தொட்டியில் அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன், மாடக்குளம் பகுதியை சேர்ந்த சிவகுமார் மற்றும் சரவணன் ஆகிய மூன்று மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கழிவு நீர் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில், 3 பேரும் எதிர்பாராத விதமாக கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து விஷவாயுவால் தாக்கப்பட்டனர். தொட்டிக்குள்ளே அவர்களின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். எனினும், இதில் மூவரும் உயிரிழந்தனர்.

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள் அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருகின்றன.

Must Read : முகக்கவசம் கட்டாயம்.. மீறினால் அபராதம் வசூலிக்க நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

அந்தவகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,கழிவுகளைக் கையாள்வதில் மனிதர்களை ஈடுபடுத்தமாட்டோம் என்று வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது, என அரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "மதுரை மாநகராட்சியின் கழிவு நீர் வெளியேற்றும் தொட்டியில் இறங்கிய தொழிலாளர்கள் 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் இந்தத் தொட்டிக்குள் இறக்கிவிடப்பட்டதாக எழுந்திருக்கும் புகார் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் இந்த அவலநிலை தொடருமோ? 'கழிவுகளைக் கையாள்வதில் மனிதர்களை ஈடுபடுத்தமாட்டோம்' என்று வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது; விஞ்ஞானத்தின் துணைகொண்டு அதனை உடனடியாக செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை." என்று அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: TTV Dinakaran