சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலருக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமின்

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் தாமஸ் பிரான்சிஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஓர் அவசர வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலருக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமின்
மதுரை உயர் நீதிமன்றம்
  • Share this:
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள காவலர் தாமஸ் பிரான்சுக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் தாமஸ் பிரான்சிஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஓர் அவசர வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரத்தில் உள்ள தனது தந்தை சேவியர் பிரான்சிஸ், அக்டோபர் 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5:30 மணியளவில் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாகவும், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க இருப்பதால் தனக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் மனு அளித்திருந்தார்.

Also read: துப்புரவு தொழிலாளி மகனின் மருத்துவ படிப்பிற்கு இரண்டாவது முறையாக நிதியுதவி வழங்கிய அறக்கட்டளை


மேலும், நீதிமன்றம் விதிக்கும் விதிமுறைகளைப் பின்பற்றுவேன் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார். நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள சாத்தான்குளம் காவலர் தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரத்தைச் சேர்ந்த  தாமஸ் பிரான்சிசுக்கு, அக்டோபர் 17ம் தேதி முதல் 19ம் தேதி மாலை 6 மணி  வரை 3 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.இடைக்கால ஜாமினில் இருக்கும் காலத்தில், நாள்தோறும் காலை 10 மணிக்கு தாமஸ் பிரான்சிஸ் மெய்ஞானபுரம் காவல் நிலையத்தில் நேரில் சென்று கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனையுடன் 3 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading