தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 - திங்கட்கிழமை அரசு விடுமுறை

தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 - திங்கட்கிழமை அரசு விடுமுறை
  • Share this:
வெளியூரில் வசிப்போர் சொந்த ஊர் சென்று தீபாவளியை கொண்டாடிவிட்டு திரும்ப ஏதுவாக தீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்தது.

இது குறித்து வெளியாகியுள்ள அரசாணையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வந்ததனால், அதனை ஏற்று, அக்டோபர் 28 திங்கட்கிழமை அன்று விடுமுறை அறிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9 அன்று சனிக்கிழமை பணிநாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


First published: October 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்