3 மகள்களும் காதல் திருமணம் செய்ததால் விரக்தி - விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட தந்தை

தனது மூன்றாவது மகளும் காதல் திருமணம் செய்துகொண்ட சோகத்தால், தென்காசி மாவட்டத்தில் மனமுடைந்த தந்தை தற்கொலை செய்துகொண்டார்.

3 மகள்களும் காதல் திருமணம் செய்ததால் விரக்தி - விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட தந்தை
கோப்புப் படம்
  • Share this:
புளியங்குடி பேச்சியம்மன் தெருவில் வசித்து வந்த 64 வயதான மாயாண்டி என்பவரின் இரண்டு மகள்கள் காதல் திருமணம் செய்துகொண்டனர். மூன்றாவது மகளின் திருமணத்தையாவது தனது விருப்பப்படி நடத்த வேண்டும் என்று மாயாண்டி ஆசைப்பட்ட நிலையில், அவரும் உறவினர் ஒருவரை காதலித்து, கடந்த 28ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

இதனால் மிகவும் துயரம் அடைந்த மாயாண்டி, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ALSO READ |  ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இளம்பெண் வாய் வழியாக உடலுக்குள் நுழைந்த 4 அடி நீள பாம்பு... அதிர்ச்சியில் மருத்துவர்கள் (வீடியோ)


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: September 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading