முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குப்வாரா துப்பாக்கிச்சண்டை - தமிழகத்தைச் சேர்ந்த வீரர் உள்பட மூன்று சி.ஆர்.பி.எப் படையினர் உயிரிழப்பு

குப்வாரா துப்பாக்கிச்சண்டை - தமிழகத்தைச் சேர்ந்த வீரர் உள்பட மூன்று சி.ஆர்.பி.எப் படையினர் உயிரிழப்பு

உயிரிழந்த வீரர்கள்

உயிரிழந்த வீரர்கள்

சந்திர சேகர், தமிழகத்தின் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கிச்சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிரால்குண்ட் வங்கம் - காசியாபாத் என்ற இடத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். அதேவேளையில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

அஷ்வினி குமார் யாதவ், சந்திர சேகர், சந்தோஷ்குமார் ஆகிய மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சந்திர சேகர், தமிழகத்தின் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

மேலும், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தின் அருகே, 14 வயது சிறுவனின் சடலமும் கிடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

வீரர்களின் உயிர்த்தியாகத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேற்று இதே மாவட்டத்தில் ஹந்த்வாரா என்ற இடத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் கர்னல் உள்பட ஐந்து பேர் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: CRPF, CRPF Martyrs, Jammu and Kashmir