கடலூர் அருகே உள்ள கே.என்.பேட்டையில் ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக பல இடங்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் கடலூர் டிஎஸ்பி சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்து.
அதன்படி டிஎஸ்பி சாந்தி தலைமையிலான போலீசார் வெள்ளிக்கிழமை காலை கே.என்.பேட்டை பகுதியில் உள்ள அந்த வீட்டிற்கு சென்றனர் . வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் வீட்டில் வேறு யாரும் இல்லாததால் கதவின் பூட்டை உடைத்து காவலர்கள் உள்ளே சென்று பார்த்தனர் .
அங்கு வீடு முழுவதும் பண்டல் பண்டலாக காணப்பட்டன. அந்த பண்டல் மூட்டையினை திறந்து பார்த்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் ஏராளமாக இருந்தது தெரியவந்தது . இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி ஸ்ரீஅபிநவ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க...ரயில்வே பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு - தெற்கு ரயில்வே விளக்கம்
மேலும் சம்பவ இடத்தை பார்வையிட்ட எஸ்.பி குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை போலிசார் அமைத்து மாவட்டத்தில் வேறு எங்கு எல்லாம் குட்கா உள்ளது என்று தீவிர சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே இருந்த குட்கா யாருக்கு சொந்தமானது என்பது குறித்தும் வீட்டின் உரிமையாளர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் படிக்க...மற்ற உடல் உறுப்புகள், நினைவாற்றலில் பிரச்னை இல்லை - எஸ்.பி.பி உடல்நலம் பற்றிய சமீபத்திய தகவல்கள்
மேலும் உணவுப் பாதுகாப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட குட்கா விலையை மதிப்பீடு செய்தனர். அதில் இருந்த சுமார் 8 டன் குட்கா பொருட்களை எஸ்.பி அலுவலகத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீட்டை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போடிச்செட்டி தெருவில் மளிகை கடை வைத்திருக்கும் பாரதி (வயது 36) என்பவர் வாடகைக்கு எடுத்து, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பாக்குகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க...BREAKING | உள்துறை அமைச்சர் அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், குட்கா வினியோகஸ்தராக இருந்த திருப்பாதிரிப்புலியூர் பிடாரிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன், ராம்குமார் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கே.என்.பேட்டை பிரசாந்த், போடிச்செட்டித்தெரு தேவநாதன், நெல்லிக்குப்பம் கணபதி ஆகிய மூவரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான பாரதி என்பவர் வீட்டில் சோதனை மேற்கொண்டத்தில் பல கோடி ரூபாய்க்கு சொத்து ஆவணங்கள், வீடுகளில் எங்கு பார்த்தாலும் கட்டுகட்டாக ரொக்க பணமும் தங்க நகைகளும் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசாரிடம் பாரதி கூறுகையில், சாதாரண காலத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை காய்கறி வாணங்களில் வைத்து கடத்தி வந்து விற்பனை செய்தாலும் அதிக லாபம் இல்லை.
மேலும் படிக்க...செமஸ்டர் கட்டணம் செலுத்த தவறினால் PhD படிப்பிலிருந்து வெளியேற்ற நேரிடும் - அண்ணா பல்கலை
ஆனால் ஊலடங்கு காலத்தில் ஒரு பாக்கெட் 100 முதல் 150 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் நல்ல லாபம் கிடைத்து ஊரடங்கு பொது முடக்க காலத்தில் மட்டும் சுமார் 100 க்கு மேற்பட்ட டன் போதை பொருட்களை கடந்தி வந்து விற்பனை செய்தாகவும் அதில் தான் 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பாரதி வீட்டில் கிடைத்த சொத்து ஆவணங்களை கைபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 5 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளதால் இது தொடர்பாக விசாரணை நடத்த வருமானவரிதுறைக்கு தகவல் அனுப்ப காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cuddalore