Home /News /tamil-nadu /

தனியார் நிறுவனத்தில் புகுந்து மிரட்டல்.. திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

தனியார் நிறுவனத்தில் புகுந்து மிரட்டல்.. திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

எஸ்.ஆர்.ராஜா

எஸ்.ஆர்.ராஜா

கம்பெனியின் சிஇஓ கிருஷ்ணமூர்த்தி என்பவரை ஒருமையில் பேசியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டி அவமரியாதை செய்யும் சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  செங்கல்பட்டு மாவட்டத்தில்  தனியார் நிறுவன ஊழியரை ஒருமையில் திட்டிய தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே மல்ராசாபுரம் பகுதியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தேஜஸ் மொபார்ட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கொரியா நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் ஆர்.கே. சர்மா. இவருக்கு கம்பெனியில், விற்பனை உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் கொரியன் கம்பெனி வழங்கியிருந்தது.

  கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில், சுமார் 120 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நிறுவனத்தின் எம்.டி.யாக பணியாற்றி வந்த ஆர்.கே. சர்மா கடந்த 2018ம் ஆண்டு அந்த கம்பெனியை வடமாநிலத்தைச் சேர்ந்த மண்ணு கோயல், பூஜா கோயல் என்பவர்களிடம் மோசடியாக விற்பனை செய்ததாகத் தெரிகிறது. தொழிலாளர்களை உடனடியாக வெளியேற்ற முடியாது என்பதற்காக, 10 வருடங்களுக்கு கம்பெனி தொடர்ந்து நடைபெறும் என்றும், அதற்கு வாடகையாக 10 லட்சம் ரூபாய் மாதம் தோறும் வழங்கப்படும் என்றும் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார்.

  இவ்வாறு சுமார் 230 கோடி ரூபாய் வரை அவர் மோசடி செய்து நிறுவனத்திலிருந்து பணத்தை சுருட்டியிருப்பது அம்பலமானது. இதுகுறித்து கொரியன் நிறுவனத்தின் சார்பில் ஆர்.கே. சர்மா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் தலைமறைவான ஆர்.கே. சர்மாவை தேடி வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை நிறுவனத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, கம்பெனியை உடனடியாக காலி செய்ய வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

  Also Read : திமுக அரசை கண்டித்து பாஜக சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு...

  கம்பெனியின் சிஇஓ கிருஷ்ணமூர்த்தி என்பவரை ஒருமையில் பேசியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டி அவமரியாதை செய்தததாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சிகள் கம்பெனியின் நுழைவாயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் ஒருமையில் பேசி, இந்த நிறுவனத்தை இழுத்து மூடி விடுவோம் என கூறுவது பதிவாகியுள்ளது.

  இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூட இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜா தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டார். வட இந்தியர்கள் ஆதிக்கம் ஏற்கெனவே தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், வட இந்திய முதலாளிக்கு ஆதரவாக ஒப்பந்தத்தை மதிக்காமல் தங்களை தாம்பரம் எம்.எல்.ஏ. வெளியேற்ற முயல்வதாக குற்றம்சாட்டினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஓட்டு போட்ட கட்சித் தொண்டனுக்கே இந்த நிலைதான் நீடிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தாம்பரம் எம்.எல்.ஏ. 120 தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து தலைமைச் செயலருக்கு இணையதளம் வாயிலாக புகார் அளித்துள்ளனர். மறைமலை நகர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தாம்பரம் MLA எஸ்.ஆர். ராஜா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இது குறித்து தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கூறுகையில், நண்பர் ஒருவர் தனது இடத்தில் பிரச்சனை உள்ளதாகக் கூறி தன்னை அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்டார். நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் தன் நண்பருக்கு அங்கு வாடகைக்கு இருக்கும் நபர்கள் வழி விடுவதில்லை என்றும் விளக்கம் தெரிவித்தார்.
  Published by:Arunkumar A
  First published:

  Tags: Crime News, DMK, MLA

  அடுத்த செய்தி