Home /News /tamil-nadu /

வீட்டில் ஏறி குதித்த 3 கரடிகள்... பூஜைக்கு வைத்திருந்த எண்ணெய்யை குடித்து விட்டு எஸ்கேப் - சிசிடிவி காட்சிகள்

வீட்டில் ஏறி குதித்த 3 கரடிகள்... பூஜைக்கு வைத்திருந்த எண்ணெய்யை குடித்து விட்டு எஸ்கேப் - சிசிடிவி காட்சிகள்


வீட்டின் இரும்பு தடுப்புகளை ஏறி குதித்த 3 கரடிகள்

வீட்டின் இரும்பு தடுப்புகளை ஏறி குதித்த 3 கரடிகள்

வீட்டு வாயிலில் சாமி படங்கள்  முன்பு எண்ணை ஊற்றி விளக்கேற்றப்பட்டு இருந்தது.  அந்த எண்ணையை 3 கரடிகளும் குடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வீட்டின் இரும்பு தடுப்புகளை ஏறி குதித்த 3 கரடிகள் , பூஜைக்காக வைத்திருந்த எண்ணெய்யை குடித்து விட்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கரடிகள் நடமாட்டத்தால் அப்பகுதி  பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் வனப்பகுதி அருகில் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை அப்பகுதியைச் சோ்ந்த வக்கீல் பாண்டி என்பவரது  வீட்டின் இரும்பு தடுப்புகளைத் 3 கரடிகள் அடுத்தடுத்து தாவி குதித்து உள்ளே புகுந்தன.

    அங்கு  வாயிலில் சாமி படங்கள்  முன்பு எண்ணை ஊற்றி விளக்கேற்றப்பட்டு இருந்தது.  அந்த எண்ணெய்யை குடித்த 3 கரடிகளும் மீண்டும் இரும்பு தடுப்பை தாண்டி குதித்து  சர்வசாதாரணமாக அங்கிருந்து சென்றன.



    வீட்டில் இருந்த சிசிடிவி கேமிராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. காலையில் காமிராவை பார்த்த வக்கீல் பாண்டி  குடும்பத்தினர் வீட்டுக்குள் கரடிகள் வந்து சென்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    ALSO READ |  மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு... டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே தண்ணீர் திறக்க வாய்ப்பு

    அடிக்கடி ஊருக்குள் வந்து செல்லும் கரடிகளால் குடியிருப்பு வாசிகள்  அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே  குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி வரும் கரடிகளை கூண்டு வைத்துப்பிடித்து அடா்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    செய்தியாளர் : குருசாமி சுப்பிரமணியம்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: CCTV, CCTV Footage

    அடுத்த செய்தி