• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்த அறிவிப்பு

28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்த அறிவிப்பு

மாநில தேர்தல் ஆணையம்

மாநில தேர்தல் ஆணையம்

மறைமுகத் தேர்தலுக்கான கூட்டத்தை கூட்டும்படி மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

  • Share this:
    காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாளை 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    திருநெல்வேலியில் களக்காடு, நான்குநேரி உள்ளிட்ட நான்கு ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம், திருப்பத்தூரில் இரண்டு ஒன்றியங்களிலும், விழுப்புரத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்களிலும் மக்கள் வாக்களிக்க உள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு, வேலூரில் தலா மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறவுள்ளன.

    தென்காசியில் கடையநல்லூர், குருவிகுளம் உள்ளிட்ட ஐந்து ஒன்றியங்களிலும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சியில் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களிலும், ராணிப்பேட்டையில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும் மக்கள் வாக்களிக்க இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

    இதனிடையே, 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் வரும் 22ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : இன்னும் 9 நாள் தான் இருக்கு... சசிகலாவின் அதிரடி திட்டம்!

    அதே நாளில், ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் என மொத்தம் 130 இடங்களை நிரப்பும் வகையில், மறைமுகத் தேர்தலுக்கான கூட்டத்தை கூட்டும்படி மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: