முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வீட்டுக்குள் அரைகுறை ஆடையுடன் மர்மநபர்.. 2 வது கணவர் புகார் - சசிகலா புஷ்பாவை விசாரணைக்கு அழைத்த போலீஸ்

வீட்டுக்குள் அரைகுறை ஆடையுடன் மர்மநபர்.. 2 வது கணவர் புகார் - சசிகலா புஷ்பாவை விசாரணைக்கு அழைத்த போலீஸ்

சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா

Sasikala Pushpa | படுக்கை அறையில் அடையாளம் தெரியாத நபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார். நான் அதிர்ச்சியாகி அந்த நபரை செல்போனில் வீடியோ எடுத்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா உட்பட 3 பேர் மீது சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் அவருடைய 2 வது கணவர் ராமசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சசிகலா புஷ்பா, மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த ராஜா, விழுப்புரத்தைச் சேர்ந்த அமுதா ஆகிய 3 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் படுக்கை அறையில் மர்மநபர் இருந்தது குறித்து 2வது கணவர் ராமசாமி ஆன்லைன் மூலம் கொடுத்த புகாரின் பேரில் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கடந்த 26ம் தேதி நேரில் வந்தும் புகார் அளித்திருந்தார். ராமசாமி கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்ட ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரணை நடத்தி தற்போது சசிகலா புஷ்பா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ள சசிகலா புஷ்பா சென்னை பாடி டிவிஎஸ் காலனி பகுதியில் உள்ள ஜீவன் பீமாநகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவருடைய வீட்டு படுக்கை அறையில் மர்ம நபர்களை தமக்கு தெரியாமல் அனுமதித்ததாக அவரது 2-வது கணவர் வழக்கறிஞர் ராமசாமி புகார் செய்துள்ளார்.

Also read: சென்னை ஆழ்கடலில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள்!

இந்நிலையில் வீடியோ ஆதாரத்துடன் ஆன்லைன் மூலமாக சசிகலா புஷ்பா மீது அவரது 2-வது கணவர் வழக்கறிஞர் ராமசாமி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராகிவிட்டு காரில் கடந்த 13-ந் தேதி எனது மகளுடன் சென்னை வந்தேன். சென்னை, ஜீவன் பீமா நகரிலுள்ள எனது வீட்டிற்கு வந்து கதவை தட்டினேன். அமுதா என்பவர் கதவைத் திறந்தார் வீட்டு படுக்கை அறையில் எங்கள் வீட்டிற்குள் உணவு பொட்டலங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ஆல்கஹால் வாடை வீசியது. படுக்கை அறையில் எனது மனைவி சசிகலா புஷ்பா படுத்து இருந்தார்.

மற்றொரு அறையில் உள்ள படுக்கை அறையில் அடையாளம் தெரியாத நபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார். நான் அதிர்ச்சியாகி அந்த நபரை செல்போனில் வீடியோ எடுத்தேன். அந்த நபரும் அமுதா என்பவரும் என்னை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்தனர். எனவே அந்த நபர்கள் மீதும், கணவன் என்ற முறையில் எனக்கு தெரியாமல் அந்த நபர்களை வீட்டிற்குள் அனுமதித்த மனைவி சசிகலா புஷ்பா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் ராமசாமி புகாரில் தெரிவித்துள்ளார்.

Also read: பர்தாவுக்கு போட்டியாக காவித் துண்டு: கர்நாடக கல்லூரிகளில் தொடரும் சர்ச்சை

தற்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சசிகலா புஷ்பா காவல் நிலைய விசாரணைக்கு வருமாறு ஜெ.ஜெ.நகர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் - கண்ணியப்பன்

First published:

Tags: BJP, Crime News, Sasikala Pushpa