ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கலகம் செய்யவே வந்தீங்களா? உச்சக்கட்ட கோபத்தில் கொந்தளித்த சபாநாயகர் அப்பாவு!

கலகம் செய்யவே வந்தீங்களா? உச்சக்கட்ட கோபத்தில் கொந்தளித்த சபாநாயகர் அப்பாவு!

சபாநாயகர்

சபாநாயகர்

சட்டபேரவையில் மக்கள் பிரச்சனைகளுக்கே முதலிடம் தரப்படும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சட்டப்பேரவையில் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், சபாநாயகர் அப்பாவு ஆத்திரமடைந்துள்ளார்.

  தொடர்ந்து 2வது நாளாக இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. இபிஎஸ்-ம், ஓபிஎஸ்-ம் அருகருகே அமர்ந்திருந்த நிலையில், அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

  சபாநாயகர் பல முறை எச்சரித்தும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், அவைத்தலைவர்களால் அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார்.

  தொடர்ந்து பேசிய அவர், வேண்டுமென்றே கலகம் செய்வதற்காக அதிமுகவினர் வந்துள்ளதாகவும், 1989 கலைஞர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது பட்ஜெட் புத்தகத்தை  கிழித்தது போல் இன்று அதிமுகவினர் நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு தீர்மானத்தை இங்கு இருந்தால் ஆதரிக்க வேண்டுமே என்பாதால் அமளி செய்கிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது என்றார்.

  திருமதி ஜானகி அம்மையார் பதவி ஏற்கும் போது எப்படி கலகம் செய்தீர்களோ அதே போன்று இன்றும் செய்கிறீர்கள் என்றும், சட்டபேரவையில் மக்கள் பிரச்சனைகளுக்கே முதலிடம் தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: TN Assembly