தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன், ஆர்த்தி மருத்துவமனை, உரிமையாளர் கோவிந்தராஜன் வீடு, திருமண மண்டபம் என நேற்று காலை முதல் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனை இரவிலும் தொடர்ந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவர் சென்னையை தலைமை இடமாக கொண்டு தமிழகம் மட்டுமின்றி, நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் ஆர்த்தி ஸ்கேன், லேப்ஸ் என்ற நிறுவனத்தினை நடத்தி வருகிறார். மேலும் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே ஆர்த்தி மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி மருத்துவர் கோமதி இதனை கவனித்து வருகிறார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்த்திஸ்கேன் மையங்கள், உரிமையாளர் வீடு, மருத்துமனை என நேற்று ( செவ்வாய்கிழமை) 25 இடங்களுக்கு மேல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அதன்படி, கோவில்பட்டி அண்ணாபஸ் நிலையம் அருகேயுள்ள ஆர்த்தி மருத்துவமனை, ஆர்த்திஸ்கேன், உரிமையாளர் வீடு மற்றும் ஆர்த்தி திருமண மண்டபம் என 5 குழுக்கள் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கோவில்பட்டி ஆர்த்தி மருத்துமனையின் மேலாளர், மற்றும் 2 ஊழியர்கள் வீடுகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதில் மேலாளர் மற்றும் பெண் ஊழியர் ஒருவர் வீட்டில் இருந்து மருத்துவமனை தொடர்பான சில ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் மருத்துவமனை கணக்கு விபரங்கள், ஸ்கேன் மையங்கள் தொடர்பான தரவுகள், மேலும் கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மற்றும் அதன் வருமானம் குறித்தும் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அத்துடன், கோவிந்தராஜன் மனைவி கோமதியிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை ஊழியர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவிலும் தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில், ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் 2ஆவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IT Raid, Kovilpatti, Thoothukodi