தமிழகத்தில் 30,000-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு.... இன்று ஒரேநாளில் 493 மரணங்கள்

கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 493 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா  இரண்டாவது அலை காரணமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கடந்த வாரங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தளர்வுகளற்ற ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

  தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 28864 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 லட்சத்து 5 ஆயிரத்து 546 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 32 ஆயிரத்து 982 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

  தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 493 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனைகளில் 199 மரணங்களும் அரசு மருத்துவமனையில் 294 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 754ஆக அதிகரித்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: