ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வேலூரில் ஒரே நாளில் ₹28.50 லட்சம் பறிமுதல்... தீவிர சோதனையில் தேர்தல் பறக்கும் படை

வேலூரில் ஒரே நாளில் ₹28.50 லட்சம் பறிமுதல்... தீவிர சோதனையில் தேர்தல் பறக்கும் படை

தேர்தல் பறக்கும் படை

தேர்தல் பறக்கும் படை

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 28,50,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் ₹28.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5-ம் தேதி வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறவுள்ளதால், பணப்பட்டுவாடாவைத் தடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையிலான 133 பேர் கொண்ட பறக்கும் படை குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கிரீன் சிக்னல் பகுதியில் காரில் வந்த அமீர் அப்பாஸ் என்பவர், ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 1,50,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, வசூர் பகுதியிலுள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ஏழுமலை வீட்டில் பணம் பதுக்கி வைத்திருந்த 27 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணத்தை வட்டாட்சியரிடம் அதிகாரிகள் ஒப்படைப்பட்டது.

ஆக மொத்தம், நேற்று ஒரே நாளில் 28,50,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் பணம் கடத்தப்படுவது, அதனைபிடிக்கும் காவல் துறை இது போன்ற நிகழ்வு நடந்துகொண்டேதான் இருக்கிறது. சினிமா படங்களில், “அரசியலில் இதெல்லாம் சகஜம்பா” என்பது போல் உள்ளது இந்நிகழ்வுகள்.

Also Watch: நிலவில் நீர்த்துளியை கண்டறிய விண்ணில் பாய ரெடியானது சந்திரயான்-2!

First published:

Tags: Elections 2019, Lok Sabha Elections 2019, Vellore, Vellore S22p08