கொரோனா காலத்தில் சென்னையில் மட்டும் 2,781 பிரசவம்: பாதுகாப்பாக நடைபெற்றது எப்படி?

கொரோனா காலத்தில் சென்னையில் மட்டும் 2,781 பிரசவம்: பாதுகாப்பாக நடைபெற்றது எப்படி?
மாதிரிப் படம்
  • Share this:
சமூக நல மையங்கள், 24 மணி நேர அவசரகால மருத்துவமனை, மூலம் கொரோனா காலத்தில் சென்னை மாநகராட்சியில் 2781 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு வழிகாட்டுதல்படி பிரசவ தேதி குறிக்கப்படும் 5 நாட்களுக்கு முன்பாகவே கொரோனோ தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதன் முடிவில் கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்று இருப்பது என்பது உறுதி செய்யப்படுவர்களுக்கு சென்னையில் இராயபுரம் அரசு மருத்துவமனை, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை, கஸ்தூர்பா காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இதைத்தவிர்த்து தொற்று இல்லாத கர்ப்பிணிகளுக்கு சென்னை மாநகராட்சின் சமூக நல மையங்கள் மற்றும் 24 மணி நேர பிரசவ மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கப்படும். இதன்படி இந்த கொரோனா காலத்தில் 2,780 பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் பெருமாள் பேட்டை, செனாய் நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளும், மணலி, மாதவரம், ஆர்.கே.நகர், சஞ்ஜிவராயன்பேட்டை, புளியந்தோப்பு, அயனாவரம், பாடி, வடபழனி, போரூர் ஆலந்தூர், அடையார், பெருங்குடி உள்ளிட்ட இடங்களில் நகர்புற சமூக நல மையங்களும் உள்ளது. இந்த மையங்களில் கொரோனா தொற்று இல்லாத கர்ப்பிணிகளுக்கு பிரவசம் பார்க்கும் சிகிச்சை தடையின்றி நடைபெற்று வருகிறது. இதன்படி மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 2,781 பெண்களுக்கு பிரசவங்கள் நடைபெற்றுள்ளது.

மாதம் வாரியாக பிரசவ விவரம்மார்ச் - 550

ஏப்ரல் - 649

மே - 856

ஜூன் - 736

மொத்தம் - 2,781
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading