ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் இயக்கப்படும் 27 ரயில்கள் நாளை ரத்து...

தமிழகத்தில் இயக்கப்படும் 27 ரயில்கள் நாளை ரத்து...

தமிழகத்தில் இயக்கப்படும் 27 ரயில்கள் நாளை ரத்து...

சென்னையில் இருந்து மதுரை, காரைக்குடிக்கு இயக்கப்படும் ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 21 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 6 ரயில்களின் சேவை பகுதி அளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

  நிவர் புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது 21 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

  அதன்படி நாளை சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செல்லும் 6 ரயில்களின் சேவை, சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் ரயில் சேவை மற்றும் சென்னை எழும்பூர்- மதுரை இடையேயான ரயில் சேவை ஆகியவை இருமார்க்கமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னை எழும்பூர்- திருச்சி இடையேயான 2 ரயில்களும், சென்னை சென்ட்ரல்- பெங்களூரு இடையேயான 4 ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் 2 ரயில்களும் , கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு செல்லும் நிஜாமுதீன் ரயிலும் இருமார்க்கமும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கன்னியாகுமரி- நிஜாமுதீன் ரயில் இன்றும், நாளை மறுநாளும் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது, காரைக்குடி- சென்னை , மதுரை- சென்னை, திருச்சி- சென்னை இடையேயான ரயில் சேவை நாளை இருமார்கமும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதேபோல் நாளை சென்னையில் இருந்து புறப்படவிருந்த சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான ரயில் சேவை இருமார்க்கமும் ரத்து செய்யப்படுதாவ அறிவிக்கப்பட்டுள்ளது.

  மழை, புயல் செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Cyclone Nivar, Nivar, Southern railway, Tamil Nadu