ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல்: 25 குழுக்கள்.. 1.5 லட்சம் மின் கம்பங்கள்.. தயார் நிலையில் மின்வாரியம்!

மாண்டஸ் புயல்: 25 குழுக்கள்.. 1.5 லட்சம் மின் கம்பங்கள்.. தயார் நிலையில் மின்வாரியம்!

கோப்பு படம்

கோப்பு படம்

புயலின் நகரும் வேகம் மணிக்கு 13 கிலோ மீட்டராக குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் பாதிக்கக்கூடிய பகுதிகளில் உடனடியாக மின்வாரி ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னையில் இருந்து 260 கிலோ மீட்டர் தென்கிழக்கு நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயலின் நகரும் வேகம் மணிக்கு 13 கிலோ மீட்டராக குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அது தற்போது அதி தீவிர புயலில் இருந்து புயலாக வழுவிழந்துள்ளது.

இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது ஏற்படும் தாக்கத்தை சரிசெய்ய மின்வாரிய ஊழியர்களை தயார் நிலையில் இருக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு 25 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர் எனவும் 1.5 லட்சம் போஸ்ட் கம்புகள் மற்றும் தேவையான உபகரணங்கள் அனைத்தும் இருப்பில் உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் புயல் கரையை கடக்கும் பொழுது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் எனவும் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் மின்சார வாரியம் உறுதியளித்துள்ளது.

புயல் பாதிக்கக்கூடிய மாவட்டங்களில் இரவு நேரத்தில் மின்வாரிய ஊழியர்கள் தொடர் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cyclone Mandous, TNEB, Weather News in Tamil