கொரோனாவால் இறந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் இழப்பீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மு.க.ஸ்டாலின்

அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்களுக்கு 30,000 வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுமென, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  கொரோனா பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய், இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.

  மேலும், கொரோனா இரண்டாம் அலையில் பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

  அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் , செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், ஆய்வுக்கூட பணியாளர்கள், சிடி ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்தி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ஊக்கதொகை வழங்கப்பட இருக்கிறது.

  இதன்படி ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இதர பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

  பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படவிருக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: