240 புதிய பேருந்துகள், 2 நடமாடும் பணிமனைகளை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி

10 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு அம்மா அரசு நடமாடும் பணிமனைகளையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

240 புதிய பேருந்துகள், 2 நடமாடும் பணிமனைகளை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி
  • Share this:
போக்குவரத்து துறை சார்பில் 240 புதிய பேருந்துகள் மற்றும் 2 நடமாடும் பணிமனைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைசெயலகத்தில் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

கடந்தாண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், விதி எண் 110ன் கீழ் அறிக்கை வாசித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்தார்.

இதன் அடிப்படையில் இன்று முதற்கட்டமாக 240 புதிய பேருந்துகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் மொத்த 84 கோடி ரூபாய் ஆகும். இதேபோல் 10 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு அம்மா அரசு நடமாடும் பணிமனைகளையும் தொடங்கி வைத்தார். தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


இந்தப் பகுதிகளில் பழுதாகும் அரசு பேருந்துகளை அங்கேயே சென்று பழுதுநீக்க 3 பணியாளர்களுடன் இந்த நடமாடும் பணிமனைகள் செயல்படும். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மூத்த அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 
First published: January 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading