24 மணிநேரமும் மும்முனை மின்சாரம்... முதலமைச்சரின் அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு

கோப்பு படம்

24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  விவசாயிகளுக்கு ஏற்கனவே 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. எனினும், சில நேரங்களில் வெறும் மூன்று மணிநேரமும், நான்கு மணிநேரமும் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

  மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டாலும், பல நேரங்களில் மின்சார பம்புகளை பயன்படுத்தியே தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால், 24 மணிநேர மும்முனை மின்சார அறிவிப்பை வரவேற்றுள்ள விவசாயிகள், இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  மின்சார உற்பத்தியை மாநில அரசின் அதிகாரப்பட்டியலில் கொண்டுவந்தால் தான், தொடர்ந்து மின்சாரத்தை வழங்க முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்குப் பிறகு மீண்டும் மின் விநியோகம் குறைக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.

  மேலும் படிக்க...விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் - முதல்வர்!

  24 மணிநேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ஆண்டுதோறும் கூடுதலாக 3 ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: