Home /News /tamil-nadu /

சென்னை புத்தகக் காட்சியில் கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை..!

சென்னை புத்தகக் காட்சியில் கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை..!

கீழடியில் தமிழ்நாடு அரசு நடத்திய 4ஆம் கட்ட அகழாய்வு முடிவுகள் குறித்த புத்தகம் 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு சென்னை புத்தகக் காட்சியில் இடம் பெற்றிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ அரங்கில்  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்திய சென்னை புத்தக கண்காட்சி, கடந்த 9ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது.

புத்தகக் காட்சி அரங்கிற்கு வெளியே `கீழடி – ஈரடி தமிழ் தொன்மங்கள்’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த தொல்பொருள் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தொடங்கிவைத்திருந்தார்.

கீழடி அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டும்  செயற்கை மாதிரிகளாலும் கீழடியில் அகழாய்வு செய்யப்பட இடம் போன்றே தத்ரூபமாக இந்த அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
இதுமட்டுமின்றி கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்திய 4ம் கட்ட அகழாய்வு முடிவுகளை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளில் புத்தகமாகவும் தமிழகத் தொல்லியல்துறை விற்பனை செய்தது.

தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகள் ரூ.50 என்ற விலையிலும் மற்ற மொழிப் பதிப்புகள் ரூ.200 என்ற விலையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த புத்தகங்களை வாசகர்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். கீழடி புத்தகம் வாங்கும் திட்டம் இல்லாமல் வந்தவர்களைக் கூட புத்தகத்தை வாங்க தூண்டும் வகையில் கீழடி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

புத்தக் காட்சியின் முடிவில் இந்த புத்தகங்கள் மொத்தமாக 23 ஆயிரம் பிரதிகள் விற்றதாகவும் அதில் 90% விழுக்காடு தமிழ் மொழி புத்தகங்கள் என்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Chennai book fair, Keezhadi

அடுத்த செய்தி