• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆசிரியர் மீது 23 பள்ளி மாணவியர் பாலியல் தொந்தரவு புகார்... 20 ஆண்டுகளாகத் தப்பிய ஆசிரியர் சிக்கியது எப்படி?

ஆசிரியர் மீது 23 பள்ளி மாணவியர் பாலியல் தொந்தரவு புகார்... 20 ஆண்டுகளாகத் தப்பிய ஆசிரியர் சிக்கியது எப்படி?

தஞ்சை மாவட்டத்தில், கணிதமேதை ராமானுஜம் படித்த பள்ளியில், கணித ஆசிரியர் மீது 23 பள்ளி மாணவியர் பாலியல் தொந்தரவு புகார் அளித்ததால் போக்சோவில் கைதாகியுள்ளார்.

  • Share this:
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியான இதில் தான் கணிதமேதை ராமானுஜம் படித்தார். இந்தப் பள்ளியில், கணித ஆசிரியராக சேகர் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். கொரோனா பாதிப்பு குறைந்ததால், கடந்த 1ம் தேதி பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேகர் தங்களிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக 23 மாணவியர் பள்ளி நிர்வாகத்திடம் அடுத்தடுத்து புகார் அளித்தனர். அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில், குற்றச்சாட்டுகள் உறுதியாகின. அதையடுத்து மாவட்ட எஸ்பி ரவளிபிரியாவிடம் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் சேகர் மீது புகார் அளித்தது.

    மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து அந்தப் புகாரை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாருக்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து கணித ஆசிரியர் சேகரை காவல்நிலையம் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2000ம் ஆண்டு முதலே சேகர் பள்ளி மாணவியரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது.

    பிளஸ் 2 படிக்கும் மாணவியரின் தோளில் கை போடுவது, நாற்காலியில் அமர்ந்து கொண்டு தனது அருகில் வந்து நிற்கும்படி சொல்வது என தனது வக்கிர புத்தியை பல விதங்களில் வெளிப்படுத்தியுள்ளார் என்கின்றனர் போலீசார். போக்சோ சட்டம் வருவதற்கு முன்னர், பல முறை பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சேகர் மீது பள்ளி நிர்வாகம், பணியிடை நீக்கம், ஊக்கத் தொகை ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளனர்.

    Also Read : பல கோடி மோசடியில் ஈடுபட்ட டிக் டாக் புகழ் தம்பதி கைது!

    அதேநேரம், மாணவியரின் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதியும் மானத்துக்கு அஞ்சியும் ஒதுங்கியதால், அதுவே சேகருக்கு வசதியாகப் போய் விட்டது என்கின்றனர் போலீசார் அதனால் பலமுறை பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு ஆட்பட்டாலும், சேகர் தனது வக்கிர புத்தியை மாற்றிக் கொள்ளவில்லை என்கிறது காவல்துறை அதேநேரம், சேகர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், தன் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தபோதெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உள்ளூர் பிரமுகர்களை வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் முதலிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு மிரட்டி வந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.



    இந்த முறை அதிகளவிலான மாணவியர் ஒன்று சேர்ந்து புகார் அளித்த நிலையில் சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர் வெறும் கைது நடவடிக்கையோடு நின்று விடாமல், அவரை நிரந்தரப் பணி நீக்கம் செய்து, அவருக்குரிய பணப் பலன்கள் அத்தனையையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர் பள்ளிக் கல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்

    கணிதமேதை ராமானுஜம் படித்த பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றியவர், வக்கிர புத்தியால் போக்சோவில் சிக்கிய சம்பவம் பள்ளி மாணவியரிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: