Home /News /tamil-nadu /

ஹேப்பி நியூஸ்! தமிழகத்தில் ஓமைக்ரான் பாதித்த 45 பேரில் 23 பேர் டிஸ்சார்ஜ்

ஹேப்பி நியூஸ்! தமிழகத்தில் ஓமைக்ரான் பாதித்த 45 பேரில் 23 பேர் டிஸ்சார்ஜ்

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 45 ஆக உயர்ந்துள்ள நிலையில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று 34 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் 7 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் மீதமுள்ள 4 பேர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    தற்போது ஒமைகரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 11 பேரில் நான்கு பேர் ஆபத்தான நாடுகள் என்று வகைப்படுத்தப்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள், மூன்று பேர் ஆபத்தில்லாத நாடுகளிலிருந்து வந்தவர்கள், மேலும் நான்கு பேர் இந்த ஏழு பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் 8 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். மேலும் 7 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். திருவாரூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் இவர்களையும் சேர்த்து நாற்பத்தி ஐந்து பேருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருபத்தி மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி