திமுக நடத்திய மாரத்தான் போட்டிக்கு ஆசிய சாதனையாக அங்கீகாரம்: திரட்டிய 23 லட்ச ரூபாய் கொரோனா நிதிக்கு வழங்க முடிவு

திமுக நடத்திய மாரத்தான் போட்டிக்குப் பெறப்பட்ட மொத்த பதிவுக் கட்டணம் 23 லட்ச ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

திமுக நடத்திய மாரத்தான் போட்டிக்கு ஆசிய சாதனையாக அங்கீகாரம்: திரட்டிய 23 லட்ச ரூபாய் கொரோனா நிதிக்கு வழங்க முடிவு
தமிழக அரசிடம் 23 லட்ச ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக ஒப்படைப்பு.
  • Share this:
கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவுநாளை நினைவுகூரும் வகையில், 'Kalaignar Memorial International virtual Marathon' எனும் ஓட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலய வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

அதன்படி, ஆகஸ்ட் 7 முதல் 25 நாட்கள், அதாவது ஆகஸ்ட் 31 வரை மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே 5 கி.மீ, 10 கி.மீ மற்றும் 21 கி.மீ தூரத்திற்கான மாரத்தானில் பதிவு செய்து பங்கேற்றனர். தத்தமது வீட்டு மாடியில் தோட்டத்தில், ட்ரட்மில்லில், கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கேற்ப ஓடி முடித்துள்ளனர்.

28 நாடுகள் மற்றும் இந்தியாவில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 8,541 பேர் மாரத்தானில் பங்கேற்றுள்ளனர். இதற்கு பதிவுக் கட்டணமாக தலா ரூ.300 பெறப்பட்டது. அந்தத் தொகையில் சேவை வரி நீங்கலாக பெறப்பட்ட 23,41,726 ரூபாய் மாரத்தான் போட்டியின் தொடக்கத்தில் அறிவித்ததுபோலவே கொரோனா பேரிடர் நிவாரண உதவித்தொகையாக தமிழக அரசுக்கு வழங்கப்பட உள்ளது.


Also read: சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் படுதோல்வி - அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுஉலக அளவில் பேரிடர் காலத்தில் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய 'கலைஞர் மெமோரியல் பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான்' போட்டியில் அதிகமான அளவு பங்கேற்பாளர்கள் இடம்பெற்றதால் அப்போட்டி ஆசிய சாதனையாகக் அங்கீகரிக்கப்பட்டு, 'ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதற்கான வெற்றிவிழா அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். இதன் மூலம் கிடைத்த 23 லட்ச ரூபாய் பணம் கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக நாளை காலை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
First published: September 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading