தீபாவளிக்கு 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

தீபாவளிக்கு 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
  • News18
  • Last Updated: September 27, 2018, 6:43 PM IST
  • Share this:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக சென்னையிலிருந்து நவம்பவர் 3,4,5 ஆகிய நாட்களில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் வீதம் 12 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மற்ற மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் பேருந்துகள் வீதம் 22 ஆயிரம் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையை பொருத்தவரை கோயம்பேடு, தாம்பரம், அண்ணாநகர், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து பல்வேறு இடங்களுக்கு பேருந்துகளை இயக்க போக்குவரத்துதுறை முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 5 லட்சத்து 36 ஆயிரம் பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: September 27, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading