கோவை வனமண்டலத்தில் 10 ஆண்டுகளில் 219 யானைகள் உயிரிழப்பு: ஆர்.டி.ஐயில் அதிர்ச்சி தகவல் -ஆக்கிரமிப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு

கோவை வனமண்டலத்தில் 10 ஆண்டுகளில் 219 யானைகள் உயிரிழப்பு: ஆர்.டி.ஐயில் அதிர்ச்சி தகவல் -ஆக்கிரமிப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு

யானை(மாதிரிப் படம்)

கோவை வன மண்டலத்தில் பத்தாண்டுகளில் 219 யானைகள் உயிரிழந்தது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

 • Share this:
  கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற வழக்கறிஞர், வனத்துறையினரிடம் யானை-மனித மோதல்கள் குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம் கீழ் கேட்டிருந்தார். அதற்கு வனத்துறையினர் அளித்த பதில்களில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  கோவை வன மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, நீலகிரி, கூடலூர் ஆகிய 3 வனக்கோட்டங்களில், 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 211 பேர் யானை-மனித மோதல்களில் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக கோவை வனக்கோட்டத்தில் மட்டும் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இதேபோல், கோவை வனமண்டலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 219 யானைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் கோவை வனக்கோட்டத்தில் மட்டும் 153 யானைகள் உயிரிழந்துள்ளன.

  இந்த நிலையில், யானை வழித்தடங்கள், வன ஆக்கிரமிப்பாளர்கள் யார், வன ஆக்கிரமிப்பாளர்கள் மீது எடுத்த நடவடிக்கை, சுற்றுலா நிதி பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு வனத்துறையினர் பதிலளிக்கவில்லை என வழக்கறிஞர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

  உயிர் சூழல் மிகுந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வன ஆக்கிரமிப்புகள் காரணமாக யானைகள் மற்றும் மனிதர்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அனுமதியின்றி இயங்கி வரும் சொகுசு விடுதிகள், செங்கல் சூளைகள் உள்ளிட்டவை மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், வனத்துறையில் போதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

  யானைகளின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும், வனத்துறையினர், வன ஆக்கிரமிப்புகளை அகற்றி வனவிலங்குகளின் வாழிடங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

  அதேசமயம் சுற்றுலா ஒப்பந்தங்கள் மற்றும் வனத்துறையில் உள்ள பட்டியல் மற்றும் பழங்குடி அதிகாரிகள் குறித்த தகவல்கள் வழங்கப்படவில்லை. கூடலூர் வனக்கோட்டத்தில் 75 பேரும், நீலகிரி வனக்கோட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.

  கோவை வனக்கோட்டம் அதிக மனித - யானை மோதல்கள் நடைபெறும் பகுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2010 ம் ஆண்டு முதல் 2020 செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் கோவை வன மண்டலத்தில் 211 பேர் மனித - யானை மோதல்களில் உயிரிழந்துள்ளனர்.

  அதிகபட்சமாக கோவை வனக்கோட்டத்தில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். கூடலூர் வனக்கோட்டத்தில் 75 பேரும், நீலகிரி வனக்கோட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். கோவை வன மண்டலத்தில் கடந்த 2010 ம் ஆண்டு முதல் 2020 செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் 219 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது. சூழல் ஆர்வலர்களிடம் சோகத்தை ஏற்படுத்தும் வகையில் இதிலும் கோவை வனக்கோட்டம் முதலிடம் பெற்றுள்ளது. கோவை வனக்கோட்டத்தில் 153 யானைகள் உயிரிழந்து உள்ளன. கூடலூர் வனக்கோட்டத்தில் 57 யானைகளும், நீலகிரி வனக்கோட்டத்தில் 9 யானைகளும் உயிரிழந்துள்ளன.

  இதேபோல யானைகள் விரட்டும் பணியில் கோவை வனக்கோட்டத்தில் 125 வனக்காவலர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், கூடலூர் வனக்கோட்டத்தில் 116 பேரும், நீலகிரி வனக்கோட்டத்தில் 43 பேரும் பணியாற்றி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சூழல் சுற்றுலா ஒப்பந்தங்கள் மற்றும் வனத்துறையில் உள்ள பட்டியல் மற்றும் பழங்குடி அதிகாரிகள் குறித்த தகவல்கள் வழங்கப்படவில்லை. இதேபோல பல்வேறு கேள்விகளுக்கு வனத்துறையினர் முறையான பதிலளிக்கவில்லை என பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: