ஊரடங்கை மீறி திருவண்ணாமலை மாவட்டத்தில் மது விற்பனை செய்த புகாரில் 215 டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு சீல் வைத்து அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை விற்பனையாளர்களே இரவு நேரங்களில் மதுபானங்களை மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஊரடங்கை மீறியும் மதுபாட்டில்களை விற்ற 215 டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு சீல் வைத்து அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.