Home /News /tamil-nadu /

ரயிலில் வந்த கறி நாய்க்கறியா? தொடரும் மர்மம்!

ரயிலில் வந்த கறி நாய்க்கறியா? தொடரும் மர்மம்!

கைப்பற்றப்பட்ட இறைச்சி (கோப்புப் படம்)

கைப்பற்றப்பட்ட இறைச்சி (கோப்புப் படம்)

கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து எழும்பூர் வந்த ரயிலில் 2,100 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது நாய்க்கறியா அல்லது கெட்டுப்போன ஆட்டிறைச்சியா என சந்தேகம் எழுந்தது.

  • News18
  • Last Updated :
    எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 2,100 கிலோ இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து எழும்பூர் வந்த ரயிலில் 2,100 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது நாய்க்கறியா அல்லது கெட்டுப்போன ஆட்டிறைச்சியா என சந்தேகம் எழுந்தது.

    இந்த இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கெட்டுப்போன நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை பாதுகாப்பாக அழிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். கடந்த சனிக்கிழமை இறைச்சியை ஆய்வுக்கு அனுப்பியும் இதுவரை அறிக்கை வெளியிடாதது சந்தேகத்தை எழுப்புகிறது.

    பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை ஆய்வு செய்ய ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும். இறைச்சி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் சரியான முகவரி இல்லாமலும் "மீன் கறி" என குறிப்பிடப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    Also watch

    Published by:DS Gopinath
    First published:

    Tags: Chennai egmore, Dog Meat

    அடுத்த செய்தி