தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!

சட்டமன்றம்

பள்ளிக்கல்வித்துறை தீரஜ் குமார், உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காக்கர்லா உஷா, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் கல்வி, பொதுப்பணி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட உத்தரவில், ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக கே.கோபால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராக சுப்ரியா சாஹு, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை செயலாளராக ஜோதி நிர்மலாசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்

  உயர்கல்வித்துறை செயலாளராக தீரஜ் குமாரும், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக காகர்லா உஷாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

  பொதுப்பணித்துறைக்கு சந்தீப் சக்சேனா, வருவாய்த்துறைக்கு குமார் ஜெயந்த், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ஹிதேஷ் குமார் மக்வானா ஆகியோர் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

  நெடுஞ்சாலைத்துறை செயலாளராக டி.கார்த்திகேயன். வேளாண் துறை செயலாளராக சமயமூர்த்தி, சுற்றுலாத்துறைக்கு சந்திர மோகன், தொழிலாளர் நலத் துறைக்கு கிர்லோஷ் குமார், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைக்கு அருண் ராய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  போக்குவரத்துத் துறை செயலாளராக தயானந்த் கட்டாரியா, கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு அபூர்வா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு மணிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  எரிசக்தித் துறை செயலாளராக தர்மேந்திர பிரதாப் யாதவ், பணியாளர் நலன் துறை செயலாளராக மைதிலி ராஜேந்திரன், சமூகநலத் துறை செயலாளராக சம்பு கல்லோலிகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: