Home /News /tamil-nadu /

40-ம் நமதே, நாடும் நமதே!! ஸ்டாலினின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

40-ம் நமதே, நாடும் நமதே!! ஸ்டாலினின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

2024 மக்களவை தேர்தலில் 40-ம் நமதே நாடும் நமதே என கூறத்தக்க வெற்றிக்கு விருதுநகர் தொடக்கமாக அமையட்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுகவின் முப்பெரும் விழாவில் பேசியதின் பின்னணி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் விருதுநகரில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மக்களவை தேர்தல் வெற்றிக்கு களப்பணியாற்ற தொடங்குமாறு கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருப்பது அரசியல் கட்சியினர் மத்தியில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களில் 39 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றது. இதன்மூலம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்தது.

2019 மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது. தொடர் வெற்றிகளை பெற்று தற்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் திமுக அண்மையில் தான் ஓர் ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தது.

தற்போது எதிர்க்கட்சியான அதிமுக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், சசிகலா என 4 அணிகளாக பிரிந்துள்ள நிலையிலும், மக்களவைத் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே தயாராகும்படி திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சரின் இந்த அறைகூவல் தேசிய அளவிலான அடுத்த கட்ட நகர்வா? அல்லது ஓராண்டு ஆட்சியின் அதிருப்தியின் வெளிப்பாடா? என கேள்வி எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கநாங்கள் செல்லும் பாதையே பெரியார் பாதை தான் - மு.க.ஸ்டாலின் பேச்சு

2024 மக்களவை தேர்தலில் திமுக அங்கம் வகிக்கின்ற கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்பை திமுக பெறும். முதலமைச்சர் அதை மனதில் வைத்து கூறியுள்ளாரா? அல்லது கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றதை போல் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று விடக்கூடாது என்ற எண்ணமா?  என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.
Published by:Salanraj R
First published:

Tags: CM MK Stalin, MK Stalin

அடுத்த செய்தி