ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

லவ் டுடே படம் பார்க்க நேரம் இருக்கு.... வெள்ளத்தை பார்வையிட நேரமில்லையா- முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

லவ் டுடே படம் பார்க்க நேரம் இருக்கு.... வெள்ளத்தை பார்வையிட நேரமில்லையா- முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

அண்ணாலை

அண்ணாலை

“பெட்ரோல் விலை மத்திய அரசு குறைத்தும் மாநில அரசு விலையை குறைக்கவில்லை”

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Erode, India

  2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பில் 25 எம்.பிக்கள் நாடாளுமன்றம் செல்வார்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

  தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.

  அதில் பேசிய அவர், “இந்த ஆர்ப்பாட்டம் என்பது காலத்தின் கட்டாயம். ஏனென்றால் முதல்வர் காலையில் எழுந்தவுடன் எந்த பொருளில் விலையேற்றம் செய்யலாம் என யோசிக்கிறார். பெட்ரோல் விலை மத்திய அரசு குறைத்தும் மாநில அரசு விலையை குறைக்கவில்லை” என குற்றமசாடினார்.

  மேலும் “100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போல தமிழகத்தில் அனைத்து படங்களையும் உதயநிதி ஸ்டாலின் வாங்குகிறார். லவ் டுடே படத்தை முதல்வர் மற்றும் அவரது மனைவி பார்க்கின்றனர். 3 மணி நேரம் படம் பார்க்கிறார் ஆனால் சென்னை வெள்ளத்தை கவனிக்கவில்லை” என குற்றம்சாட்டினார்.

  "தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி.. ரூ.2 கோடி நஷ்ட ஈடு" - அண்ணாமலை ட்வீட்! (news18.com)

  ”லவ் டுடே படத்தை போல முதல்வர் மனைவி நாமலும் செல்போன் மாத்திக்கலாமா என கேட்டார். நானும் எனது அப்பாவும் வேண்டாம் என ஓடிவிட்டோம் என உதயநிதி கூறுகிறார். முதல்வர் மற்றும் அவரது மகன் மனைவியை நம்பி செல்போன் தரவில்லை” என கூறினார்.

  “அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82% விவசாயிகளை சென்றடைகிறது. ஆனால் ஆவின் நிறுவனம் இப்படி செய்யவில்லை அதனால் ஆவின் நட்டத்தில் செல்கிறது. பால் உற்பத்தியில் வரும் லாபம் விவசாயிகளை சென்றடைய வேண்டும்.

  சென்னையில் சிறிதளவு மழை பெய்ததற்கே தண்ணீர் தேங்கியுள்ளது. டிசம்பர், ஜனவரியில் தான் மழை பொழிவு அதிகமாக இருக்கும்.” என கூறினார்.

  'கவலைபடாதீங்க.. மீண்டு வருவேன்' - உயிரிழந்த மாணவியின் கடைசி வாட்ஸ் அப் ஸ்டேட்ட்ஸ்.. கலங்கும் நண்பர்கள்! (news18.com)

  “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான குற்றவாளியை முதலமைச்சர் கொண்டாடினார். கோவை குண்டு வெடிப்பை பற்றி நாங்கள் பேசவில்லை என்றால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறந்திருப்பார்கள். தற்போது என்.ஜ.ஏ விசாரணைக்கு பிறகு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.” என தெரிவித்தார்.

  மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெருமளவு வெற்றி பெற்று தமிழகத்தில் இருந்து 25 எம்.பிக்கள் பார்லிமெண்டுக்கு செல்வார்கள் என மிக பெரிய நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Annamalai, BJP, CM MK Stalin