ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தீபாவளியன்று எப்போது பட்டாசு வெடிக்கலாம்.. என்னென்ன கட்டுப்பாடுகள்?

தீபாவளியன்று எப்போது பட்டாசு வெடிக்கலாம்.. என்னென்ன கட்டுப்பாடுகள்?

மாதிரி படம்

மாதிரி படம்

Diwali | காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவுறுத்தல்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
  பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதன் காரணமாக காற்று மாசுபடுவதற்கு வாய்ப்புள்ளதால் தமிழக அரசு பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அறிவித்துள்ளது.
  உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளாகவே தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
  கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்கலாம் என தெரிவித்துள்ளது.
  சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
  குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
  மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்கள், குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
  Published by:Anupriyam K
  First published:

  Tags: Deepavali, Diwali, Diwali festival, Fire crackers, Firecrackers, Green Cracker