Home /News /tamil-nadu /

தமிழ் எழுத்தாளர் அம்பைக்கு 2021 சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

தமிழ் எழுத்தாளர் அம்பைக்கு 2021 சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

எழுத்தாளர் அம்பை

எழுத்தாளர் அம்பை

 சி.எஸ். லஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட அம்பை, 1944-ல் கோயம்புத்தூரில் பிறந்தார்.

    2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்கிற சிறுகதை தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

    மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சாகித்திய அகாதமி விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிப்பிற்குரிய விருதுடன், பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர்கள் மத்தியில் மிகப்பெரிய உயரிய விருதாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சி.எஸ். லஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட அம்பை, 1944-ல் கோயம்புத்தூரில் பிறந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பும், பெங்களுரூவில் முதுகலைப் படிப்பும் கற்ற அம்பை, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவரான அம்பை 1960ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

    அதேபோல, கவிஞர் மு.முருகேஷ் எழுதிய அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற படைப்புக்காக பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி