• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 2021-22 பட்ஜெட் - தமிழகத்தில் வரி வருவாய், செலவினங்கள், நிதி பற்றாக்குறை எவ்வளவு?

2021-22 பட்ஜெட் - தமிழகத்தில் வரி வருவாய், செலவினங்கள், நிதி பற்றாக்குறை எவ்வளவு?

2021-22 பட்ஜெட் - தமிழகத்தில் வரி வருவாய், செலவினங்கள், நிதி பற்றாக்குறை எவ்வளவு?

2021-22 பட்ஜெட் - தமிழகத்தில் வரி வருவாய், செலவினங்கள், நிதி பற்றாக்குறை எவ்வளவு?

2021-22ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வரி வருவாய், செலவினங்கள், நிதி பற்றாக்குறை எவ்வளவு என விரிவாக பார்க்கலாம்.

  • Share this:
சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், கொரோனா பாதிப்பு காரணமாக 2021ம் ஆண்டு இடைக்கால வரவு, செலவு திட்ட மதிப்பீடுகளில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 991 கோடி ரூபாயாக இருந்த மொத்த வரி வருமான மதிப்பீடுகளை, 2021-22ம் நிதியாண்டின் திட்ட மதிப்பீடுகளில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக குறைக்கும் கட்டாயத்தில் இருப்பதாக பட்ஜெட் உரையில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் எதிர்பார்க்கப்பட்ட மாநிலத்தின் மொத்த வரி வருவாய் அளவீட்டை ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 641 கோடி ரூபாயில் இருந்து,  ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 644 கோடி ரூபாயாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றிலிருந்து தமிழ்நாடு பொருளாதாரம்  இன்னும் முழுமையாக மீண்டு வராத காரணத்தால், 2021-22ம் ஆண்டு இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீட்டில், முந்தைய அரசு அறிவித்த  41 ஆயிரத்து 417 கோடி ரூபாய் அளவிலான செலவு திட்ட மதிப்பீடு,  2021-22ம் நிதியாண்டின் முடிவில் 58 ஆயிரத்து 692 கோடி ரூபாயாக அதிகரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Also read: வரலாற்றில் முதல் இ-பட்ஜெட், 3 மணி நேரம் உரை... 50 முக்கிய அம்சங்கள்

இத்தகைய அசாதாரண நிலை காரணமாக வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது எனவும், இனி வரும் காலங்களில் நிதி ஒழுக்கம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பில் இந்த அரசின் உறுதியை எள்ளளவும் பாதிக்காது என நிதி அமைச்சர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

2021-22 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.33 சதவீதம் என 15வது நிதிக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஒட்டு மொத்த விதிகளுக்குள் நிதிப்பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும். தமிழகத்தின் கடன் சுமையை கொரோனா நோய்த்தாக்கம் முடிந்தவுடன் தாமதமின்றி சரி செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி விகிதத்தை அதிகரிப்பதே  மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான சீர்திருத்த என தெரிவித்துள்ள அமைச்சர், வெள்ளை அறிக்கை உருவாக்கியதில் 2006-07 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரி விகிதம் 8.48 சதவீதமாக இருந்தது, 2020-21ம் நிதியாண்டில் 5.46 சதவீதமாக குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தமிழ்நாட்டிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 60,000 கோடி ரூபாய்க்கும் மேலான வருவாய் இழப்பு எனவும், இதை கட்டாயம் சரி செய்ய வேண்டியது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த பத்தாண்டுகளில் நிலவிய தளர்வான வரி நிர்வாகம் வருவாய் இழப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு, மோட்டார் வாகன வரி மற்றும் மாநில ஆயத்தீர்வைகள் போன்ற முக்கியமான துறைகளில் வரி நிர்வாகத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், மேம்படுத்தப்பட்ட நிர்வாகம் மற்றும் வீண் செலவுகளைக் குறைப்பதன் வாயிலாக வரும் நிதியாண்டில் வருவாய் சூழலை கணிசமாக அதிகரிக்க முடியும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: