20,000 கோவாக்சின் தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்தன...!

20,000 கோவாக்சின் தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்தன...!

கோவாக்சின்

இதுவரை 4.5 லட்சம் சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தங்கள் தரவுகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
20,000 கோவாக்சின் தடுப்புமருந்துகள் விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தன.  அவை இன்று காலை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பு மருந்து கிடங்குக்கு கொண்டு வரப்பட்டு குளிரூட்டி வசதிகளில் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று தமிழகத்து 5,36,500  கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வந்தன. இவற்றில் 5,12,200 டோஸ்கள் மட்டுமே மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 24,300 டோஸ்கள் மாநில கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதல் கட்டமாக போடப்பட வேண்டிய தடுப்பூசிகள் ஏற்கனவே மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு விட்டதால் கோவாக்சின் தடுப்பு மருந்து தற்போதைக்கு மாநில கிடங்கில் மட்டுமே வைக்கப்படுகிறது. எனவே மாநில கிடங்கில் 44,300 கொரோனா தடுப்பு மருந்துகள் இருப்பு உள்ளன.

Also read... கொரோனொ தொற்று தாக்கும் முறை குறித்து சென்னை ஐ.ஐ.டி ஆய்வு...!

தமிழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது. இது வரை 4.5 லட்சம் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தங்கள் தரவுகள் அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: