2,000 ரூபாய் வழங்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
2,000 ரூபாய் வழங்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)
60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அதற்காக 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
கஜா புயல் பாதிப்பாலும், பல்வேறு மாவட்டங்களில் வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ,அதற்காக 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இன்று முதல் பயனாளிகள் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
இதுபோல் இந்த இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில், முதல் கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கிறார். அந்தத் திட்டத்தை சென்னையில் நடக்கும் விழாவில் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தொடங்கி வைக்கிறார்.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.