முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ₹2,000 நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மாற்றிய போது மாட்டிக்கொண்ட வடமாநில இளைஞர்

₹2,000 நோட்டை ஜெராக்ஸ் எடுத்து மாற்றிய போது மாட்டிக்கொண்ட வடமாநில இளைஞர்

 • 1-MIN READ
 • Last Updated :

  2 ஆயிரம் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து மாற்ற முயன்ற வடமாநில இளைஞர் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.

  திருப்பூர் வீரபாண்டி பகுதியில் மனோஜ் என்பவர் பணப்பரிமாற்ற கடை நடத்தி வருகிறார்.

  அவரது கடைக்கு வந்த வடமாநில இளைஞர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஐந்தை கொடுத்து தமது உறவினருக்கு அனுப்ப வேண்டுமென கூறியுள்ளார். அந்த ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் வீரபாண்டி போலீசாருக்கு மனோஜ் தகவல் கொடுத்தார்.

  இதனையடுத்து அந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் பெயர் சமீர் காந்தி சங்மா என்பதும், திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 7 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Fake Note, Tiruppur