திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளொன்றுக்கு 2000 பேருக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதற்கட்டமாக நாள் ஒன்றுக்கு 2,000 பக்தர்களுக்கு மட்டும்  தரிசனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கோயில் செயல் அலுவலர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளொன்றுக்கு 2000 பேருக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில்
  • Share this:
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் தமிழகத்தில் கோயில்களில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது 160 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் கோயில்களில் வழிப்பாட்டிற்கு அனுமதி  அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் , திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செயல் அலுவலர் அம்ரித் விடுத்துள்ள அறிக்கையில், கோயிலில் முதற்கட்டமாக நாள் ஒன்றுக்கு 2,000 பக்தர்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயிலுக்கு  65 வயதிற்கு மேற்பட்டோர், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றம் கர்ப்பணி பெண்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில்மேலும் “முதற்கட்டமாக இலவச தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண  வழி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். பக்தர்கள் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். டோக்கன் முறையில் காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கோயிலில் அனுமதிக்கப்படும் பக்தர்கள் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய கோயிலில் 13 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


வெப்ப சோதனை செய்யும் கருவி மூலம் பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கோயில் பிரதான சன்னதிகளான சுப்பிரமணிய சுவாமி மற்றும் சண்முகர் சன்னதிகளில் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

தங்க ரதம் உலா இல்லை, சண்முகார்ச்சனை, அபிஷேக  பூஜை பொருட்கள், கொண்டுவர அனுமதியில்லை. முடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல், கடற்கரையில் நீராடுதல், நாழிகிணறு நீராடுதல், மற்றும் தங்கும் விடுதிகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோயில் மூலம் வழங்கப்படும் அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்படும்.கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெற்கு டோல்கேட் அருகில் முடிகாணிக்கை எதிரில் உள்ள இடத்திலும், வடக்கு டோல்கேட் அருகில் உள்ள கலையரங்கிலும் அமர செய்து அவர்களின் அடையாள அட்டை விபரம் பெற்று டோக்கன் மற்றும் கட்டண சீட்டு வழங்கப்படும்.

மேலும் படிக்க...ஊரடங்கு கால சிங்காரச் சென்னையின் பேரழகு - புகைப்படக் கலைஞர் ராமச்சந்திரன் எடுத்த அசத்தலான கறுப்பு வெள்ளைப் படங்கள்

பக்தர்கள் 25 நபர்களாக பிரிந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்கள். கொரோனா பரவலை தடுக்க கண்காணிக்க சிறப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை குறித்து கோயில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிப்பு செய்யப்படும் என திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading