ஒசூரில் பூட்டியிருந்த வீட்டில் 200 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை... காவல் துறையினர் தீவிர விசாரணை

ஒசூரில் பூட்டியிருந்த வீட்டில் 200 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை... காவல் துறையினர் தீவிர விசாரணை

மாதிரிப் படம்

ஓசூரில் பூட்டியிருந்த வீட்டில் 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

 • Share this:
  தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த மாதையன், பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். ஓராண்டுக்கு முன்பிருந்து ஓசூரில், மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மாதையன் குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான காரிமங்கலம் சென்றார்.

  இதையடுத்து வழக்கம் போல் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் வந்து பார்த்து போது, வீட்டின் பூட்டு உடைத்து, பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதை கண்டு மாதையனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

  பின்னர் அவர் வந்து பார்த்த போது, 200 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து ஓசூர் டிஎஸ்பி முரளி உத்தரவிட்டுள்ளார்.

  மேலும் படிக்க... வேலூரில் பட்டாசு கடையில் தீ விபத்து... 3 பேர் உயிரிழப்பு  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: