மலேசியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்... மீட்டு அழைத்து வர முதல்வருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை

மலேசியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்

மலேசியாவில் 2 பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கி உள்ளதாகவும் தங்களை மீட்டு அழைத்து வர முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Share this:
திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட  மாவட்டங்களை சேர்ந்த, 2. பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட தமிழர்கள் மலேசியா நாட்டிற்கு 'ஒர்க்கிங் பர்மிட்' விசாவில் சென்றுள்ளனர். கொரானா காலகட்டத்தில் பணியாற்றிய அவர்களுக்கு உரிய ஊதியமும் வழங்கப்படவில்லை .

இதுகுறித்து கேட்டதற்கு, அவர்களின் உரிமையாளர்கள் சம்பளம் தர மறுத்ததோடு, பாஸ்போர்ட்டையும் பறித்துக் கொண்டுள்ளனர். சிலரை கண்மூடித்தனமாகவும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து மலேசிய தலைநகர் கோலாம்பூரில் உள்ள இந்திய துணை தூதரத்தில் முறையிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை தற்காலிகமாக சைனா டவுன் அருகே உள்ள சீக்கிய கோயிலில் அமைக்கப்பட்டுள்ள விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

Also Read : நூற்றாண்டு விழா காணும் தமிழக சட்டமன்றம் - சுதந்திரத்திற்கு முன்னர் எப்படி செயல்பட்டது?

அங்கு தமிழ்நாட்டினர், பஞ்சாப், மேற்வங்கம், ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோருடன்,  தமிழ்நாட்டினர் 2 பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் தற்போது உள்ளனர். காலை, இரவு 2 வேளை உணவு மட்டும் வழங்கப்படுகிறது. மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த, 4 மாதமாக அங்கு தங்கியுள்ளவர்களை, '40 ஆயிரம் ரூபாய் பணம் கட்டினால் மட்டுமே சொந்த ஊருக்கு செல்லலாம்' என்று அதிகாரிகள் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

Also Read : கிறிஸ்தவ மக்களின் ஜெபத்தின் வலிமையால் திமுக ஆட்சிக்கு வந்தது - அமைச்சர் நாசர் பேச்சு

இதனால் மனம் நொந்த, 20க்கும் மேற்பட்ட தமிழர்கள், 'தங்களது சம்பளத் தொகை, பாஸ்போர்ட்டை பெற்றுத் தர வேண்டும். தங்களது மனைவி, குழந்தைகள், குடும்பத்துடன் வாழ வைக்கவும் , தமிழ்நாடு திரும்பவும் முதலமைச்சர்  நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: