தமிழக மீனவர்கள் 20 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் 20 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே கைது செய்தனர்.

 • Share this:
  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே கைது செய்தனர்.

  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று  300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 20 மீனவர்களை கைது செய்னதர்.

  அத்துடன், இரண்டு படகுகளையும் கைப்பற்றினர். இதனால், இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபடுவதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழக மீனவர்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Published by:Suresh V
  First published: